Aionion

எங்கள் சிறந்த காப்பீட்டு தீர்வு.

காப்பீட்டு

தீர்வு.

ஹெல்த் இன்சூரன்ஸ்

உங்கள் ஆரோக்கியமே உங்கள் செல்வம். உங்கள் தேவைகள் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் விரிவான மருத்துவக் காப்பீட்டை உங்களுக்கு அளிப்பதன் மூலம் உங்களின் செலவும் மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் பாதுகாக்க நாங்கள் உதவுவோம்.

Insurancehead
Health insurance1

உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்குவது முக்கியம், ஏனெனில் நம் நாட்டில் மருத்துவப் பராமரிப்பு செலவு அதிகம், குறிப்பாக தனியார் மருத்துவமனையில். 

மருத்துவமனையில் நீங்கள் அனுமதிக்கப்பட்டால் அதுவே உங்கள் நிதியையம் சீர்குலைக்கும். சில சமயங்களில், வீட்டில் பணம் சம்பாதிக்கும் நபர் நோய் அல்லது காயம் காரணமாக வேலை செய்ய முடியாமல் போகலாம், இது நிலைமையை இன்னும் சவாலாக மாற்றும். ஒரு சிறிய வருடாந்திர பிரீமியத்தை செலுத்துவதன் மூலம் இவை அனைத்தையும் நீங்கள் தவிர்க்கலாம், இது மருத்துவ அவசரநிலைகளின் போது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

ஒரு நல்ல உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் பொதுவாக மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், மருத்துவப் பரிசோதனைகளுக்கான செலவுகள், ஆம்புலன்ஸ் கட்டணம், மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் செலவுகள் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஈடுசெய்யும்.

insurance

ஆயுள் காப்பீடு

“உங்கள் வாழ்க்கை விலைமதிப்பற்றது, உங்கள் குடும்பம் விலைமதிப்பற்றது.  இன்றே டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் மூலம் நிதிப் பாதுகாப்பை அவர்களுக்கு பரிசாகக் கொடுங்கள்.”

டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது ஆயுள் காப்பீட்டின் இன்றியமையாத ஒரு வடிவமாகும், நீங்கள் அகால மரணம் அடைந்துவிட்டால்  உங்கள் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை இது வழங்கும். இன்றைய காலகட்டத்தில் ஒருவர் வாங்க வேண்டிய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் மிக முக்கியமான வகைகளில் ஒன்றாக டேர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் கருதப்படுகின்றன.

டேர்ம் இன்ஷூரன்ஸ், மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளில் உங்கள் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவது மட்டுமல்லாமல், உங்களுக்கு வரிச் சலுகைகளையும் வழங்குகிறது. 

டேர்ம் இன்சூரன்ஸ்ஸில் , நாங்கள் மேக்ஸ் லைஃப், கோடக் லைஃப் மற்றும் எச்டிஎஃப்சி லைஃப் ஆகியவற்றுடன் இணைந்துள்ளோம்.

வாகன காப்பீடு

“உங்கள் வாழ்க்கை முறை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற  கார் மற்றும் வாகனக் காப்பீடு எடுப்பதன் மூலம் உங்கள் முதலீட்டைப் பாதுகாக்கவும்.”

Insurance

மோட்டார் வாகனக் காப்பீடு என்பது ஒவ்வொரு வாகன உரிமையாளரும் சட்டப்படி வைத்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான காப்பீடு ஆகும். இது உங்கள் வாகனத்திற்கு ஏற்படும் சேதம் அல்லது இழப்புக்கு எதிராக நிதி பாதுகாப்பை வழங்குகிறது. மோட்டார் வாகனக் காப்பீட்டுக் கொள்கைகள் பொதுவாக விபத்துகள், திருட்டு, தீ மற்றும் இயற்கைப் பேரழிவுகள் உள்ளிட்ட பல்வேறு அபாயங்களை உள்ளடக்கும்.நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாலிசியின் வகையின் அடிப்படையில் கவரேஜ் நிலை மாறுபடலாம், ஆனால் எதிர்பாராத நிகழ்வின் போது  நிதிப் பாதுகாப்பை வழங்கும் வகையிலான திட்டம்  வடிவமைக்கப்பட்டுள்ளன.  Royal Sundaram, Go digit  மூலம் எங்களது  வாடிக்கையாளர்களுக்கும் மோட்டார் வாகனக் காப்பீட்டை நாங்கள் வழங்குகிறோம்.

Scroll to Top